புழுதிவாக்கத்தில் மாலை நேர சாலையோர கடைகளில் காவல்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலை துறையினர் வசூல் வேட்டை. .!
சென்னை
புழுதிவாக்கத்தில் மாலை நேர சாலையோர கடைகளில் காவல்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலை துறையினர் வசூல் வேட்டை.
நடைபயிற்சி பூங்காவிற்கு வரும் நபர்கள் வாகனம் விட முடியாமலும், போக்குவரத்து நெரிசலாலும் வாகன ஓட்டிகள் அவதி.
சென்னை வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ்.சாலை, புழுதிவாக்கத்தில் பறக்கும் ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபயிற்சி பூங்கா ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நடைபயிற்சி பூங்காவிற்கு வருகை தரும் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகராட்சி சார்பில் எம்.ஆர்.டி.எஸ்.சாலையின் ஓரம் இரு புறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாலையான இங்கு பூங்காவிற்கும் ஏராளமானோர் வருகின்றனர்.
இதனை பயன்படுத்தி கொள்ளும் சிலர் புழுதிவாக்கத்தின் சாலையில் இருபுறங்களிலும் தள்ளுவண்டி கடைகள், உணவகங்கள், உணவு டிரக், ஐஸ்கீரிம் கடைகள் என 30க்கும் மேற்பட்ட கடைகளை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
மேலும் நடைபயிற்சி பூங்காவிற்கு வருபவர்களின் இருசக்கர வாகனங்களை விடுவதற்கு மாநகராட்சி ஏற்படுத்திய பார்க்கிங் இடத்தில் கடை வைத்திருப்பவர்கள் வியாபாரம் பாதிக்கப்படும் வேறு இடத்தில் வாகனங்களை விட வேண்டும் என சட்டவிரோத கடைக்காரர்கள் பொதுமக்களை மிரட்டுகின்றனர்.

யார் கடை வைக்க அனுமதி கொடுத்தது என கேட்டால் ஆதம்பாக்கம் போலீஸாருக்கு மாதா மாதம் 5000 முதல் 15000 வரை கடைக்கு ஏற்றாற் போல் மாமூல் கொடுப்பதாகவும், அதே வேளையில் போக்குவரத்து போலீஸார் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை என அனைத்து துறை அதிகாரிகளையும் சரிகட்டி தான் கடையை போடுகிறோம்.
எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என மார் தட்டுகின்றனர்.
சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸாரின் உரிய நடவடிக்கை இல்லாமல் இவர்களிடம் சன்மானம் பெறுவதால் நாளுக்கு நாள் சாலையோர கடைக்காரர்களின் எண்ணிக்கையும் அவர்களின் அட்டூழியமும் கூடிக் கொண்டே செல்கிறது.
ஆதம்பாக்கம் போலீஸார் மாமூல் வாங்கும் தகவல் உளவுத்துறை போலீஸாருக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் கண்டும் காணாமல் இருக்கின்றனரா? காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி பணம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக கடை வைக்க அனுமதி கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கடைகளை முழுமையாக அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர்
S S K
