குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் தரம் விரைவில் உயர்த்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி .!
தென்காசி

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் தரம் விரைவில் உயர்த்தப்படும்
அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தென்காசி ஜூலை 10
தென்காசி மாவட்டம், குற்றாலம்
ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இணை ஆணையர் அன்புமணி கல்லூரி முதல்வர் அமிர்த வல்லி ஆகியோர் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர்கல்லூரி அலுவலகம் நூலகம் மாணவிகள் தங்கும் விடுதி ஆய்வக அறை புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை ஆகியவற்றை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அறநிலையத்துறை சார்பில் 25 பள்ளிகள் 10 கல்லூரிகள் ஒரு ஐடிஐ நிர்வகிக்கப் பட்டு வருகிறது திருக்கோயில் பணிகள் தொடர்பாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அறநிலையத் துறை பள்ளி, கல்லூரிகளையும் ஆய்வு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்டு தற்போது குற்றாலம் அறநிலையதுறை கல்லூரியை ஆய்வு செய்துள்ளதாகவும் அறநிலைத்துறை கல்லூரி மற்றும் பள்ளிகளை பொறுத்த வரையில் 24 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர்.
குற்றாலம் கல்லூரியின் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தோம். இங்கு 2800 மாணவிகள் படிக்கின்றனர் இங்கு உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் குற்றாலம்
ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் தரம் விரைவில் உயர்த்தப்படும் என்றும்கூறினார்.
இதனைத் தொடர்ந்து குற்றாலம் குற்றால நாத சுவாமி திருக் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லதுரை உதவி ஆணையர் ஆறுமுகம் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் உறுப்பினர்கள் ஸ்ரீதர் வீரபாண்டியன் ராமலட்சுமி சுந்தர்ராஜன் இசக்கி அரசு வழக்கறிஞர் வேலுச்சாமி ஒன்றிய செயலாளர்கள் ஜே கே ரமேஷ் பொன் செல்வன் பேரூர் செயலாளர்கள் சங்கர் என்ற குட்டி சுடலை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா கொக்கி குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்
AGM கணேசன்