வீராணத்தில் ரூ.41 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க விழா.!
தென்காசி
வீராணத்தில் ரூ.41 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்க விழா
பழனிநாடார் எம்எல்ஏ-.
ஜெயபாலன் தொடங்கி வைத்தனர்
தென்காசி, நவ - 08
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், வீராணத்தில் ரூ.41 லட்சத்தில் பல்வேறு திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
வீராணத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியில் இருந்து தலா ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கோவிலில் கலையரங்கம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் புதிய ரேசன் கடை திறப்பு, மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ. 8 லட்சத்தில் சிமெண்ட் சாலை, ரூ. 7 லட்சத்தில் நெல் களம் திறப்பு விழா நடைபெற்றது.
ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலரும், ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளருமான வீராணம் சேக்முகமது முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பெர்றுப்பாளர் வே.ஜெயபாலன், சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் பங்கேற்று அடிக்;கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தும் பேசினர்.
இந்நிகழ்ச்சியில், வீராணம் கிளை செயலாளர் பாலசுப்ரமணியன், கோபால், சோலைசேரி சந்திரன், மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் அமானுல்லா, ஒன்றிய கவுன்சிலர்கள் பழனி (எ) பால் துரை, கிருஷ்ணம்மாள் வெங்கடேஷ், மாநில பேச்சாளர் மரியராஜ் முன்னாள் விஏஓ பாலசுப்பிரரமணியன், இருதாலாய மருதப்பாண்டியன் ,ஜமாத் தலைவர் மிய்யாகண்ணு, துணைத் தலைவர் முகமது உசேன், கனி, அறங்காவலர் குழு தலைவர் குமார், முன்னாள் கிளை செயலாளர்கள் ஜலாலுதீன், ஹமீது, ஒன்றிய பிரதிநிதி வெள்ளத்துரை, முகமது அலி சாகுல் ஹமீது,சண்முகவேலு, கே.எஸ் .முகமது அலி,ஒன்றிய நிர்வாகிகள் மைதீன், அசன்,நாட்டாமை ஆறுமுகசாமி, சேக் மைதீன்,அப்துல் வஹாப், முஸ்தபா கமால், மைதீன், நைனார், ஜெய்லானி சுடலை எஸ் கே சதாம் உசேன், வேல்முருகன், மற்றும்
ரஹ்மத்துல்லாஹ், மீரா உசேன், அன்சார் அலி த.மு.மு.க மாவட்ட தொண்டர் அணி செயலாளர் வீராணம் முத்தலிபு, தமுமுக நிர்வாகி முகம்மது அலி, சுலைமான், காசிம், கான்சா இப்ராஹிம்,ஒன்றியஅணி அமைப்பாளர்கள் சின்னத்துரை, முகம்மது முஸ்தபா, மோனிஸ்காந், ரமேஷ் ராஜா, நசீர், சேக் சிந்தாமுதார் பீமா, பத்மா பூசாரி சுப்புராஜ் பணித்தள பொறுப்பாளர் மாரியம்மாள் ரேஷன் கடை ஊழியர் முத்துப்பாண்டி, ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
