செங்கோட்டை பள்ளியில் சட்டம் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் .!

தென்காசி

செங்கோட்டை பள்ளியில் சட்டம் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் .!

செங்கோட்டை பள்ளியில் சட்டம் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் 

தென்காசி, நவ - 08

தென்காசி மாவட்டம்,  செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமாகிய இளையராஜா உத்தரவின் பேரில்   போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .

செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்ற சட்ட விழிப்புணர்வு மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை வகித்தார்.

இந்த முகாமில் வழக்கறிஞர் கார்த்திகை ராஜன் மாணவ மாணவிகளுக்கான அடிப்படை கடமைகள் குறித்தும், வழக்கறிஞர் சுடர் முத்தையா விழிப்புணர்வு பற்றியும் விளக்க உரையாற்றினர்.

வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆதி பாலசுப்பிரமணியன் பேசும்போது  போதை பற்றிய விழிப்புணர்வு மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின்  செயல் பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

 இந்த விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக பணியாளர் ஜெயராம சுப்பிரமணியன்  செய்திருந்தார்

முடிவில்  தலைமை ஆசிரியர்  நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்