தென்காசியில் பாமக கோரிக்கை ஆர்ப்பாட்டம் .!

தென்காசி

தென்காசியில் பாமக கோரிக்கை ஆர்ப்பாட்டம் .!

தென்காசியில் பாமக கோரிக்கை ஆர்ப்பாட்டம் 

தென்காசி நவ 07

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருமான, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கைக் கிணங்க தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளை முறை கேடுகளை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும், தென்காசி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை வகித்தார்.

மாநில துணைத்தலைவர் சேது அரிகரன், மாவட்ட செயலாளர்கள் குலாம், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், தமிழக அரசை கண்டித்தும் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாமகவினர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந் நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் நெல்லை அரிகரன், மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, ரவி தென்காசி நகர செயலாளர் சங்கரநாராயணன், ஒன்றிய தலைவர் தண்டபாணி, நகர தலைவர்கள் பழனி சாஸ்தா மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள்
சண்முகையா பாண்டியன், லட்சுமண பாண்டியன், சங்கரநாராயணன்,
சரஸ்வதி, பேரூர் தலைவர்கள் அப்துல் மஜீத், பூதத்தான், செந்தில் முருகன் செயலாளர்கள் சுடலை, மைதீன் பிச்சை, மாரிக்கனி, துரை ஐயப்பன் ரூபன் நாகலிங்கம் மகாராஜா மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்