கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சியில், ஒழுகும் வீட்டில் அப்பா வசித்து வருதாக கண்ணீர் மல்க பேசிய மாணவி பிரேமா விற்கு வீடு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

தென்காசி

கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சியில், ஒழுகும் வீட்டில் அப்பா வசித்து வருதாக கண்ணீர் மல்க பேசிய மாணவி பிரேமா விற்கு வீடு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

தென்காசி மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த  முதலமைச்சர் மு.க ஸ்டாலின், 25.9.2025 அன்று சென்னையில் நடைபெற்ற "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சியில், ஒழுகும் வீட்டில் அப்பா வசித்து வருதாக கண்ணீர் மல்க பேசிய மாணவி பிரேமா விற்கு வீடு வழங்க உத்தரவிட்டார்..

அதன்படி “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழுநீர்குளத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, செல்வி பிரேமாவின் பெற்றோர்  ராமசாமி, முத்துலெட்சுமி ஆகியோரை சந்தித்தார்.

செய்தியாளர் 

AGM கணேசன்