இலஞ்சி பேரூர் திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி பரப்புரை நிகழ்ச்சி.!
தென்காசி
இலஞ்சி பேரூர் திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி பரப்புரை நிகழ்ச்சி
திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பங்கேற்பு
தென்காசி டிச 13
தென்காசி மாவட்டம், இலஞ்சி பேரூர் திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி தமிழ்நாடு தலை குனியாது என்ற பரப்புரை தெருமுனை கூட்டம் இன்று இலஞ்சியில் வைத்து நடை பெற்றது.இலஞ்சி பேரூராட்சி 6,9,10 வது வார்டு, பூத் எண் 17, சிற்றாற்று வீரியம்மன் கோவில் 1வது தெரு தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூர் திமுக செயலாளர் முத்தையா தலைமை வகித்தார்.

இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னதாய் சண்முக நாதன்,ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம்,முன்னிலை வகித்தனர்.
பேரூர் செயலாளரும், பேரூராட்சி மன்ற துணை தலைவருமான முத்தையா
வரவேற்புரை ஆற்றினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி, சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முக நாதன், ஒன்றிய பிரதிநிதி கணேசமூர்த்தி, இலஞ்சி குமாரகோவில் அறங்காவலர் குழு தலைவர் பூவையா, திமுக இளைஞர் அணி சுப்பிரமணியன், பிஎல்ஏ 2, கார்த்திகேயன், பிடிஏ, ரமேஷ், பிஎல்சி, சேர்மன், சித்தாய், சக்திவேல், இசக்கிமுத்து, சிவன், பரமசிவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பிரதிநிதி கணேச மூர்த்தி நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
