காவல் துறை அதிகாரிகளுக்கு கல்லில் உறைந்த வரலாறு எனும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று நூல் நினைவுப்பரிசாக வழங்கினர்.!
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு காவல்துறையின் மேற்கு மண்டலம் ஐ.ஜி மற்றும் கிருஷ்ணகிரி காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை கிருஷ்ணகிரி மலை கோட்டையில் வரவேற்பு அளித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர், கல்வெட்டுக் காவலன் கோவிந்தராஜ் மற்றும் கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாச்சியர் சிவக்குமார் ஆகியோர் கல்லில் உறைந்த வரலாறு எனும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று நூலை நினைவுப்பரிசாக வழங்கினர்.
நிகழ்வில் மாருதி மனோகரன், தினமணி ரவி, லாசிமா பேகம், பாலாஜி மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
