என்.சி.டி.என்ற புதிய நிறுவனத்தை சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்கள் துவக்கி வைத்தார் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மிகப் பிரமாண்டமான முறையில் துவங்கப்பட்டுள்ள என்.சி.டி.என்ற புதிய நிறுவனத்தை சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் அருகில் புதியதாக மிகப் பிரம்மாண்டமான முறையில் துவங்கப்பட்டுள்ள என்.சி.டி.என்ற புதிய நிறுவனத்தின் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ரியல் எஸ்டேட் மற்றும் ஆஷிப் பில்டர்ஸ் உரிமையாளரும், நகர் மன்ற உறுப்பினருமான முகமது ஆஷீப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் அவர்கள் கலந்துகொண்டு என்.சி.டி. என்ற புதிய நிறுவனத்தை திறந்து வைத்து சிறப்பித்தார்.
அப்போது நகர்மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப், கே.வி.எஸ். சீனிவாசன், முன்னாள் நகர திமுக செயலாளர் நவாப், நகர திமுக பொறுப்பாளர்கள் அஸ்லாம், வேல்மணி, கிருஷ்ணகிரி சிவில் இன்ஜினியரிங் சங்கத்தின் தலைவர் தணிகாசலம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ