பா.ஜ.க.வில் இருந்து விலகி திமுக வில் இணைந்த தொண்டர்கள். !
கிருஷ்ணகிரி

பர்கூர் தொகுதியில் இருந்து பாஜக வினர் தே.மதியழகன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, தொகரப்பள்ளி கிராமத்து சேர்ந்த பாஜகவினர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு மதியழகன் எம் எல் ஏ பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பீ.டி.அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி. நாகராஜ்,பர்கூர் ஒன்றிய கழக செயலாளர்கள் அறிஞர், வி. ஜி. ராஜேந்திரன், ஒன்றிய கழக துணைச் செயலாளர் ராஜ்(எ)ராஜதுரை, திமுக ஞானவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ