தென்காசி நகராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள்.! நடும் நிகழ்ச்சி.

தென்காசி

தென்காசி நகராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள்.! நடும் நிகழ்ச்சி.

தென்காசி நகராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தென்காசி ஆகஸ்ட் 30


தென்காசி நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின்(urban Greening campaign) கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடை
பெற்றது.

சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர்-   நெல்லை நிர்வாக மண்டல இயக்குனர்-  ஆகியோரது உத்தரவின் பேரில் தென்காசி நகராட்சி பகுதிகளில் பூங்காக்கள், நீர்நிலைகளின் கரைப்பகுதிகள்,  அதிக அளவு கழிவுகள் சேரும் திறந்தவெளிப் பகுதிகள்(GVPs), பிரதான சாலைகளின் நடுப் பகுதிகள்(center median) முதலான பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணிகள்  மேற் கொள்ளப்பட்டுள்ளது. 
இதன் முதற்கட்டமாக தென்காசி நகராட்சி, குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம், பிராணா மரம் வளர் அமைப்பு, பசுமை தென்காசி ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன்
இணைந்து  அண்ணா நகர்- நுண் உரமாக்கல் மைய வளாகம்,வெல்கம் நகர்பூஙகா,
மலையான் தெரு- வண்ணார் குளம் ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டது.

 இந்த பணி தென்காசி நகர் மன்ற  தலைவர் சாதிர் தலைமையில், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்
நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராமராஜன், பிராணா மர வளர் அமைப்பு நிர்வாகி சீனிவாசன் மற்றும் அங்கத்தினர்கள்,  பசுமை தென்காசி முஸ்தபா, வெல்கம் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் மகளிர் பிரதிநிதிகள், அண்ணாநகர் தன்னார்வலர் பாபி, சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, துப்புரவுப்பணி மேற்பார்வை
யாளர்கள் முத்து மாரியப்பன், சுப்பிரமணி,சுடலை, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் முஸ்தபா, பரப்புரையாளர்கள் முத்துக்குமார், முத்துமாரி, செய்யது, பாலாஜி, தங்கப் பாண்டியன்,
சுப்புலட்சுமி, டிபிசி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

"மரம்தான்  பூமியின் நுரையீரல்"- எனவே இயற்கையின் பாதுகாப்பு அரணான மரங்களை வளர்ப்பிலும், அவற்றின் பராமரிப்பிலும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றி "பசுமையான தென்காசி" படைப்போம் வாரீர்  என நகர் மன்ற தலைவர் சாதிர்  தென்காசி நகர பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முடிவில் குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.