திடீரென தீப்பற்றி எறிந்த நார் மில் குடோன். !

கிருஷ்ணகிரி

திடீரென தீப்பற்றி எறிந்த நார் மில் குடோன். !

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த பத்திரிகானுர் சேர்ந்த கோவிந்தன் வயது 50 என்பவர், சக்கிலிநாத்தம் பகுதியில் நார் மில் நடத்தி வந்தார.

திடீரென்று தீப்பற்றி குடோன் எரிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்

இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்

மாருதி மனோ