பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கோல போட்டிகள் : ஏராளமான பெண்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்பு.!

கிருஷ்ணகிரி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கோல போட்டிகள் : ஏராளமான பெண்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்பு.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கோல போட்டிகள் : ஏராளமான பெண்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள ஹிமகிரி சிட்டி லே-அவுட் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழகம் செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில், ஆந்திர ஜோதி தெலுங்கு பத்திரிகை மற்றும் சந்தூர் சோப் நிறுவனம் சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.

இந்த போட்டிகளில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் அதிக அளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் கோலமாவு மற்றும் கலர் மாவுகளில் விதவிதமான புள்ளி கோலங்களை போட்டனர். போட்டியாளர்களுக்கு கோலங்களை போடுவதற்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் காலம் கொடுக்கப்பட்டது. இந்த போட்டிகளில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கோலங்களை போட்டனர். 

 கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக  முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி  கலந்து கொண்டு கோலப் போட்டிகளில் பங்கேற்ற பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்த பார்கவி என்பவருக்கு முதல் பரிசாக 6000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் இரண்டம் இடத்தை பிடித்த அனிதா என்பவருக்கு இரண்டாம் பரிசாக நான்காயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் மூன்றாவது பரிசாக 10 மகளிருக்கு 3000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் நான்காம் பரிசாக  10000  ரூபாய் 10 மகளிருக்கு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு 30,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த கோலப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் கேடயங்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் ரெட்டி, ஓசூர் மாநகராட்சி சேர்மன் அசோக் ரெட்டி ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் லட்சுமி ஹேம குமார், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நவீன், முன்னாள் சேர்மன்  வெங்கடசாமி, சூளகிரி ஒன்றிய கழக செயலாளர் மாதேஷ் ஓசூர் ஒன்றிய கழக செயலாளர் ரவி,பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகர் ரெட்டி, மீரா மருத்துவமனை பிஆர்ஓ கோபாலகிருஷ்ணன், ஜாக் மீடியா இயக்குனர் ஜெயசீலன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன், தொழில் அதிபர்கள் ரமேஷ் மோகன், கார்த்திக், கழக நிர்வாகி சந்திரசேகர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ