தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளினை முன்னிட்டு விஜயகாந்தின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் .!

கிருஷ்ணகிரி

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளினை முன்னிட்டு விஜயகாந்தின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் .!

கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் டேம் சாலையில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளினை முன்னிட்டு விஜயகாந்தின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்.

கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாள் விழா வெகு விமர்ச்சியாக பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி டேம் சாலையில்  கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் அதிரடி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்து விஜயகாந்த்  அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நடைப்பெற்ற இந்த விழாவில் கேக் வெட்டியும்  இனிப்புகளும் வழங்கி கொண்டாடியதோடு  பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த விழாவின் போது தேமுதிக ஒன்றிய அவைத் தலைவர் சின்னையன், ஒன்றிய துணை செயலாளர் சிவகுமார், கவுன்சிலர் வேடி என்ற வேடியப்பன் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் தேமுதிக கட்சியை சேர்ந்த சங்கர், செந்தில்குமார், சிவகுமார், கோபி, சின்னசாமி, சக்திவேல், கிருஷ்ணன், வேடி, சங்கர், லட்சுமணன், கிரிகோவிந்தசாமி, கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ