தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் .!

தென்காசி

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் .!

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தென்காசி ஆகஸ்ட் 25


தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  தென்காசி மாவட்டம் அகரக்கட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் கணேசன்  தலைமையில்  மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி  முன்னிலையில் நடைபெற்றது.


இந்த ஆலோசனை கூட்டத்தில்  மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் புதிய நிர்வாகிகளுக்கான வின்னப்பபடிவம் வழங்கி பேசும் போது  தமிழகத்தில் தற்போது பாலியல் ரீதியான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதற்கு காரணமாக இருப்பது வலைதளம்  யூடியூப்  பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் ஆபாச படங்கள் நாளுக்கு நாள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கிறது தற்போது செல்போன் ஐந்து வயது குழந்தையில் தொடங்கி முதியவர் வரை பயன் படுத்துகிறார்கள் நல்ல செய்திகளை பார்க்கும் போதே இடையில் ஆபாச படங்கள் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையான படங்கள் விளம்பரம் போல வந்து செல்கிறது  இந்த ஆபாச படங்களை பொது தலங்களில் வெளியிடுவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் 

 மேலும் அரசு பள்ளியில் படித்து மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வை எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கி வருகிறது இந்த இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கின்ற மாணவர்களுக்கு வழங்க வேண்டும் தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் அரசு   பள்ளிகள் இல்லை அரசு பள்ளிகள் இல்லாத இடங்களில் அரசு  உதவி பெறும் பள்ளிகள் தான் இருந்து வருகிறது அரசு பள்ளியும் அரசு உதவி பெறும் பள்ளியும் ஒன்று தான் என்று நினைத்து பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்க்கிறார்கள்.

திறமைகள் இருந்தும் அரசு பள்ளிகள் இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவ கனவு என்பது எட்டாக்கனியாக இருந்து வருகிறது அதனால் தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில்  தமிழக முதல்வரையும்  கல்வி அமைச்சரையும்  கேட்டுக் கொள்வதாக பேசினார் இந் நிகழ்ச்சியில் மாவட்ட கல்விகுழு செயலாளர் முப்புடாதி கடையநல்லூர் ஒன்றிய தலைவர் மணிகன்டன் இளைஞர் அணி தலைவர் கார்த்திகைக்குமார் மாரிமுத்து கணபதிராமன் கிருஷ்ணமூர்த்தி கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்