ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரும் பிரம்ம கமலம் பூ பிரம்ம தேவருடன் தொடர்புடையது என்பதால் கற்பூரம் ஏற்றி வழிபடும் மக்கள்..!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் வீடுகளில் பூத்து குலுங்கும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரும் பிரம்ம கமலம் பூ பிரம்ம தேவருடன் தொடர்புடையது என்பதால் கற்பூரம் ஏற்றி வழிபடும் மக்கள்.
கிருஷ்ணகிரி ஆனந்த் நகரை சேர்ந்தவர் முன்னாள் இந்திய இராணுவ வீரரும், குத்து சண்டை பயிற்சியாளருமான முனிராசு, இவரது மனைவி அஞ்சலி இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு மாடியில் மாடி தோட்டம் அமைத்து உள்ளனர்.
இதில் அரிய வகை மருத்துவ குணம் உடைய தர்ப்பைப் புல், ஆடாதொடா, லெமன் ரோஸ், துளசி, பிரண்டை, பாம்பு விரட்டி, எலுமிச்சை, கற்பூரவல்லி உள்ளிட்ட பல்வேறு மலர் வகையான மூலிகை செடிகள் மட்டுமின்றி.
சாதி மல்லி, சங்கு பூ, முல்லை, நித்திய கல்யாணி, செண்பகவல்லி, பவள மல்லி, குண்டு மல்லி, முல்லை மற்றும் ஜார்க்கண்ட் மாநில மலரான பிரம்ம கமலம் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களையும் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நல்லிரவில் பூக்கும் குணமுடைய பிரம்ம கமலம் செடி பூக்க துவங்கியதை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் இந்த பிரம்ம கமலப் பூ பிரபஞ்சத்தின் படைப்பாளரான பிரம்மாவின் விருப்பமான மலராகக் கருதப்படுவதால் மக்கள்
இந்த மலருக்கு தேங்காய், பழம் வெத்திலை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்து வழிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ஆசிரியர் அஞ்சலி தெரிவிக்கையில் வீடு கட்டி முடிந்த பிறகு வீட்டு மாடியில் மூலிகை மற்றும் அரிய வகையான மலர்களையும் நடவு செய்து பரமாரித்து வருகிறோம். இதில் பிரம்ம கமலம் செடியினையும் நடவு செய்தோம் தற்போது அந்த செடியில் பூ பூக்கத் துவங்கி உள்ளதை பார்க்கும் போது மிகவும் மகிழ்சியாகவும் உள்ளது. மிதமான நறுமன வாசனையும் இந்த மலரில் வீசுவதால் மனசுக்கு இதமாகவும் உள்ளது.
குறிப்பாக.பிரம்ம கமல மலர் பிரபஞ்சத்தின் படைப்பாளரான பிரம்மாவின் விருப்பமான மலராகக் கருதப்படுவதால் நாங்கள் தினமும் இரவு பூஜைகள் செய்து வழிபடுகிறோம். இதில் பிரம்ம கமலம் பூவிற்கு கற்பூரம் ஏற்றி அதன் முன் நின்று என்ன வேண்டினாலும் அது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆனால் இரவில் மலர்ந்து ஒரு சில மணி நேரத்தில் வாடிவிடுவதால், இந்த மலரினை ஏராளமானவர்கள் வந்து பார்த்து பூஜைகள் செய்து வழிபட்டு செல்வதோடு பிரம்ம கமல மலர் பூக்கும் போது பலரின் பக்தியை ஈர்ப்பதாகவும் உள்ளதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
செய்தியாளர்
மாருதி மனோ
