இயற்கை மரணம் அடைந்த நபரது உடல் தானம் பெறப்பட்டது .!
கிருஷ்ணகிரி
இயற்கை மரணம் அடைந்த நபரது உடல் தானம் பெறப்பட்டது
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே .சத்தியபாமா அவர்கள் அளித்துள்ள செய்தி
திருமதி ஆர் சுதந்திரா, வயது 78, பெண், கணவர் பெயர் திரு. ராஜகோபாலன், 5/704 - 61 A,கே.சி.சி. நகர், ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் என்பவர் கடந்த 16.10.25 ஆம் நாள் அன்று இயற்கை மரணம் அடைந்தார். அவரது உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடற்கூறியியல் துறைக்கு தானமாக வழங்கப்பட்டது.
இறந்துவிட்ட திருமதி ஆர் சுதந்திரா என்பவர் இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த நாளான 15 08.1947 அன்று பிறந்தவர் ஆவார் இவரது கணவர் காலம் சென்ற திரு ராஜகோபாலன் வங்கி மேலாளர் ஆவார். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
திருமதி சுதந்திரா அவர்கள் தான் இறந்துவிட்ட பிறகு எனது உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது எனது உடல் மருத்துவ மாணவர்களின் செயல்முறை பயன்பாட்டிற்கு பயன்படுத்த மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்திடுமாறு தனது மகன்கள் மற்றும் மகளிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார்.
இந்நிலைகளில் திருமதி ஆர் சுதந்திரா என்பவர் 16.10.2025 ஆம் நாள் அன்று ஓசூரில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக (78 வயது) இயற்கை மரணம் அடைந்து விட்டார்.
அவரது விருப்பப்படி அவரது மகன் திரு பாஸ்கர் என்பவர் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் அவர்களிடம் தொடர்பு கொண்டு தனது தாயார் இறந்துவிட்ட தகவலையும் தாயாரின் விருப்பப்படி அவரது உடல் மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல் துறைக்கு செயல்முறை பயிற்சிக்காக ஒப்படைப்பதாக தெரிவித்தார். உடனடியாக இக்கல்லூரி உடற்கூரியர் துறை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களிடம் இத்தகவலை தெரிவித்து அதற்கான தக்க ஏற்பாடுகள் செய்திட அறிவுறுத்தப்பட்டது
அதன் அடிப்படையில் உடற்கூறியியல் துறை பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு திருமதி ஆர் சுதந்திரா அவர்களது உடலை மாற்றம் செய்து உடற்கூறியியல் துறையில் பெற்று மருத்துவ மாணவ மாணவியர்களின் செயல்முறை பயிற்சிக்காக பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது
அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் வழங்குபவர்களுக்கு உரிய அரசு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி 5.11.2025 அன்று நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் இறந்துவிட்ட திருமதி ஆர் சுதந்திரா, என்பவரது உடல் தானம் உடற்கூறியில் துறையில் பெற்றுக் கொண்டமைக்காகவும் உரிய ஒப்புதல் சான்று அவரது வாரிசுதாரர்களான இரண்டாவது மகன் திரு ஆர் பாஸ்கர் அவரது மனைவி திருமதி அபிராமி இவர்களது மகன் திரு. நில் கிஷன் அவரது மனைவி திருமதி. சுபாஷினி அவர்களின் மகள் கவினா ஆகியோரிடம் ஒப்புகை சான்று வழங்கி கல்லூரி முதல்வர் தெரிவித்ததாவது....
15.8.1947 அன்று இந்திய சுதந்திர தினத்தில் பிறந்த இவருக்கு இவரது பெற்றோர் இந்திய சுதந்திர தினத்தின் நினைவாக சுதந்திரா என பெயர் வைத்துள்ளனர். இவர் தனது இறப்பிற்கு பின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்க விருப்பப்பட்டு இருந்ததால் இவர்களுக்கு மகன்கள் மருத்துவக் கல்லூரிக்கு உடலை தானமாக அளித்துள்ளதற்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடற்கூறுயில் துறைக்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தமது உடல்களை வழங்கிட தக்க சான்றிதழ்கள் வழங்கி இதுவரை 77 நபர்கள் உடல் தானத்திற்காக பதிவு செய்துள்ளனர் இவர்களில் 14 நபர்களுடைய உடல்கள் இதுவரை உடற்கூறியியல் துறையில் தானமாக பெறப்பட்டுள்ளது.
உடல் தானம் அளிக்க விருப்பம் தெரிவித்துள்ள 77 நபர்களுக்கு வாழ்த்துக்களையும் இவர்களில் 14 உடல்களை தானமாக அளித்த நபர்களுடைய குடும்ப வாரிசுதாரர்களுக்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
மரணத்திற்குப் பிறகும் மனிதன் மனிதனுக்காக செய்யக்கூடிய உயர்ந்த செயல் முழு உடல் தானமாகும். இன்றைய தலைமுறையினர் மருத்துவ முன்னேற்றத்தையும் மனித நேயத்தையும் இணைத்துப் பார்க்கும் சூழலில் உடல் தானம் அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகிறது.
மரணத்திற்குப் பிறகு நமது உடல் மருத்துவ மாணவர்களின் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒளிபாய்க்கக்கூடியதாகும் எதனால் மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்கும் எதிர்கால மருத்துவ மாணவர்களின் கற்றலுக்கும் மிகவும் பயனுள்ளதாகும்
எனவே உயிருடன் இருக்கும் காலத்தில், ரத்ததானம் அளித்தல் கண் தானம் அளித்தல் மற்றும் மூலைச் சாவு அடைந்தவர்கள் உடல் உறுப்புகள் தானம் வழங்குவதும், இறந்தபின் உடல் தானம் மற்றும் கண் தானம் செய்தல் போன்ற மனிதநேய செயல்கள் செய்வதில் தற்பொழுது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.
இதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் 77 நபர்களுக்கு மேல் பதிவு செய்துள்ளனர். அதில் 14 உடல்கள் தானமாக அளித்துள்ளதும் மிகவும் பெருமைக்குரிய செயலாகும் என தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ரத்ததானம் கண் தானம் உடல் உறுப்புகள் தானம் மற்றும் உடல் தானம் பெறக்கூடிய அனைத்து வசதிகளும் உள்ளது.
இதனை தாமாக முன்வந்து அளிக்க விருப்பமுள்ளவர்கள் இம்மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் அவர்களையும் அல்லது உடற்குறியியல் துறை பேராசிரியர் அவர்களையும் தொடர்பு (9499966133 அல்லது 7358131664) கொண்டு எந்த நேரத்திலும் எவ்வகை சந்தேகங்களும் பெறலாம் எனவும் தமது பதிவு விபரங்களை முறைப்படி செய்திடலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்
இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் செல்வராஜ், உடற்கூறியியல் துறை பேராசிரியர் மரு. சங்கமேஸ்வரன், இணை பேராசிரியர் மருத்துவர் சுபதா, உதவி பேராசிரியர்கள் மருத்துவர் கேசவன், மருத்துவர் கல்பனா, மருத்துவர் பவள குறிஞ்சி, மருத்துவர் கீதா, மருத்துவர் அனுராதா மற்றும் நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
