ஸ்ரீ வெற்றிவேல் முருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு விசேஷ பூஜைகள் .!

கிருஷ்ணகிரி

ஸ்ரீ வெற்றிவேல் முருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு விசேஷ பூஜைகள் .!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, சூளகிரி அருகே மருளதேவரப்பள்ளி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ வெற்றிவேல் முருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு விசேஷ பூஜைகள் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அதிமுக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி எம்எல்ஏ, அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

அப்பொழுது ஊர் பொதுமக்கள் 27 ஆண்டு காலமாக மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு சாலை வசதி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்ற எம்எல்ஏ உடனடியாக மலை மீது சாலை வசதி செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.

உடன் சூளகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், மாவட்ட பொருளாளர் மல்லையன், வேப்பனஹள்ளி ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் கே டி ஆர் என்கின்ற திமிராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் ரங்கநாத், பேரவை மாவட்ட துணை துணை செயலாளர் கேசவன், பேரவை ஒன்றிய செயலாளர் சுரேஷ், முன்னாள் ஒன்றி குழு உறுப்பினர் பழனி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் பாலா, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் சீனு, கழகப் பிரமுகர்கள் பஸவராஜ், திருமலேஷ் பசுவராஜ், பாலாஜி, லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ