அனைத்து சமுதாயம் மக்களும் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடம் அமைக்க பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி

அனைத்து சமுதாயம் மக்களும் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடம்  அமைக்க பூமி பூஜை. !

வெண்ணம்பள்ளி கிராமத்தில் அனைத்து சமுதாயம் மக்களும் பயன்பெறும் வகையில் சமுதாயக்கூடம் கட்டும் பணியினை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் மு தம்பிதுரை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெண்ணம்பள்ளி மற்றும் சூரன்குட்டை ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வெண்ணம்பள்ளி கிராமத்தில் ஒரு சமுதாய கூடம் அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் மு. தம்பிதுரை அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 15 லட்ச ரூபாய் நிதி உதவிகள் செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை வெண்ணம்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் மு தம்பிதுரை அவர்களுக்கு வெண்ணம்பள்ளி மற்றும் சூரன்குட்டை ஆகிய கிராம மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சூரன்குட்டை, வெண்ணம்பள்ளி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பணிகளை டாக்டர் மு தம்பிதுரை பூமி பூஜை செய்து சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.
 
அப்போது முன்னாள் சட்ட மன்ற  உறுப்பினர் வி.சி. ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாணவரணி செயலாளர் வெற்றி செல்வன், எம். ஜி.ஆர். மன்ற ஒன்றிய இணைச் செயலாளர் மணி, இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வில்லியம்ஸ். அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜீ, அதிமுக நிர்வாகி சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்குமார் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ
.