இல.கணேசன் மறைவிற்கு தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இரங்கல். !
கிருஷ்ணகிரி

நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கிருஷ்ணகிரியில் தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் தனது இரங்கலை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவரும் சமுக நுகர்வோர் பாதுகப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் சந்திர மோகன் தனது செய்தி குறிப்பில்,
நாகலாந்து மாநில ஆளுனரும் பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவராக விழங்கிய ஐயா இல.கணேசன் அவர்கள் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைபலன் இன்றி காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுகிறது.
தமிழகத்தின் பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர் அனைத்து தரப்பட்ட மக்களிடையே பரவலாக அறியப்பட்டவர் ஐயா இல.கணேசன் அவர்களின் மறைவு என்பது தமிழ் சமூகத்திற்கு பெரும் பேரிழப்பு. அவரது குடும்பத்தினரும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
மாருதி மனோ