ஆடி கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகப்பெருமானுக்கு அரோகரா கோசத்துடன் வேண்டுதல்.!

கிருஷ்ணகிரி

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகப்பெருமானுக்கு அரோகரா கோசத்துடன் வேண்டுதல்.!

சூரன்குட்டை கிராம மக்கள் ஆடி கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகப்பெருமானுக்கு அரோகரா கோசத்துடன் வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் திருகோவில்களில் சிறப்பு பூஜைகளும், மற்றும் பக்தர்கள் காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள சூரன் குட்டை மற்றும் வெண்ணம்பள்ளி ஆகிய கிராமங்களில் ஆடி கிருத்திகை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆடி கிருத்திகையை  முன்னிட்டு கிராம தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து வழிப்பட்ட  கிராம மக்கள் ஊர்வலமாக வந்த மக்கள் காவடிகளை நீர் நிலைக்கு கொண்டு சென்று கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

பின்னர் அலகு குத்தியும், உடலில் எலுமிச்சைபழங்களை ஊசி மூலம் குத்தியவாறு  ஸ்ரீ முருகப்பெருமான் சிறப்பு அலங்கார புஸ்ப பல்லாக்கில் எழுந்தருளிய நிலையில் ஊர்வலமாக காட்டி நாயானப்பள்ளி ஶ்ரீமுருகன் திருக்கோவிலுக்கு பவனியாக வந்தனர். பின்னர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்புப்பூஜையில் கலந்துகொண்டு  தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசங்களுடன் வழிபட்டனர்.

மேலும் இந்த விழாவின் போது வெண்ணம்பள்ளி மற்றும் சூரன்குட்டை கிராமங்களை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ