வலிமையான வலுவான இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் மீண்டும் 5வது முறையாக ஆட்சி அமைக்க போகிறது .!
தென்காசி

வலிமையான வலுவான இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் மீண்டும் 5வது முறையாக ஆட்சி அமைக்க போகிறது
சுரண்டை விழாவில் செல்வப் பெருந்தகை எம் எல் ஏ பேச்சு
தென்காசி ஜூலை 7
2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதி கிராம காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் சுரண்டை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பழனி நாடார் தலைமை வகித்தார்.
கிராம காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுரண்டை நகர்மன்ற முதல் தலைவர் வள்ளி முருகன் வரவேற்புரை ஆற்றினார். இதில் மாநில பேச்சாளர்கள் 3 நபர்களுக்கு இருசக்கர வாகனம் கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் அடையாள அட்டையினை வழங்கி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை பேசும்போது வலிமையான வலுவான இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் மீண்டும் ஐந்தாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறது என்றும் கடந்த தேர்தலில் ஆயிரம் இரண்டாயிரம் என்ற சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றோம் ஆனால் இன்னும் 8 மாதங்களில் வரப் போகின்ற தேர்தலில் குறைந்தபட்சம் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தென்காசியில் வெற்றி பெற்றார்கள் என்றும் தென்காசி மாவட்டம் முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது என்பதை நாம் பிரகடனப்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் தளபதி சமூக நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் இதுவரை பார்த்திராத பணிகளை செய்து கொண்டிருக்கிறார் இந்தியா கூட்டணியை எப்படியாவது தகர்க்க வேண்டும் இதில் ஏதாவது குழப்பம் பண்ண கூடாதா என்று முயற்சி செய்கிறார்கள் இந்தியா கூட்டணியில் ஒருசெங்கலை கூட பறிக்க முடியாது இந்தியா கூட்டணி எக்கு கோட்டை போன்றது தலைவர் ராகுல் காந்திஇதனை முழுவதுமாக கவனித்து வருகிறார் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ராம் மோகன் சங்கர பாண்டியன் சிலுவை உதய கிருஷ்ணன் ஆலங்குளம் செல்வராஜ் சட்டநாதன்மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஏஜிஎம் கணேசன், சந்தோஷ் வட்டார தலைவர்கள் முருகையா பெருமாள்கதிரவன்நகர தலைவர்கள் ஜெயபால் மாடசாமி ஜோதிடர் ராமர் உமா சங்கர் மகளிர் அணி பூமாதேவி சேர்மக்கனி கவுன்சிலர்கள் அமுதா சுப்பிரமணியன் தேவேந்திரன் மாவட்ட துணை தலைவர் சண்முகவேல் பேச்சாளர்கள் பால்துரை ஆய்க்குடி பெரியசாமி ஆலடி சங்கரையாமற்றும் சிங்கராஜ்உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்