கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு புகையிலைப் பொருட்கள் கடத்தல் ஒருவர் கைது .!
தென்காசி

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு புகையிலைப் பொருட்கள் கடத்தல் ஒருவர் கைது 496 கிலோ புகையிலை மற்றும் வாகனம் பறிமுதல்
தென்காசி, செப் - 06
கேரளாவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தமிழகத்திற்கு கடத்திவந்த நபரை கைது செய்த புளியரை போலீசார் 496 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் அதனை ஏற்றிவந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவதிபுரம் விலக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை யிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்காக கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலங்குளம் பூலாங்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சூரன் மணி என்பவரின் மகன் மாதவன் (வயது32) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட சுமார் 496 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழக கேரள எல்லையில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களின் காவல்துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை, வனத்துறை சுகாதாரத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில்
24 மணி நேரமும் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அவற்றை எல்லாம் கடந்து இந்த வாகனம் எப்படி தமிழக எல்லையான பகவதிபுரம் பகுதிக்கு வந்தது எப்படி என்பது பற்றி மாவட்ட உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி இதற்கு உடந்தையாக செயல்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்
AGM கணேசன்