போதைப் பொருட்கள்  இல்லாத தமிழ்நாடு" உறுதிமொழி ஏற்பு. !

தென்காசி

போதைப் பொருட்கள்  இல்லாத தமிழ்நாடு" உறுதிமொழி ஏற்பு. !

தமிழ்நாடு துணை முதலமைச்சர்   காவல்துறையின் சார்பில் சென்னையில்  "போதைப் பொருட்கள்  இல்லாத தமிழ்நாடு" மாநில அளவிலான  பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியினை நேரடியாகவும், தமிழ்நாட்டின்  அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி  வாயிலாக   தொடங்கி வைத்தார்.

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் நடை பெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு"மாநில அளவிலான உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர்,  எஸ்.பி. எஸ்.அரவிந்த், அரசு அலுவலர்கள், பள்ளி  மாணவ, மாணவியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்