தென்காசியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா.!
தென்காசி

தென்காசியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா
தென்காசி ஜூலை 25
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸின் 87 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சிங்கராயன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் திருமலைக்
குமாரசாமி யாதவ், அய்யம்பெருமாள் பிள்ளை, மாவட்ட தலைவர் சிவராஜ் சுந்தரம் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தென்காசி
காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்து அர்ச்சனை செய்யப் பட்டு பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தென்காசி சக்தி நகர் பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் சிறப்பு ஆராதனையும், புதிய பேருந்து நிலையம் முன்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதிபேரவை மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் குலசேகரன், நகர செயலாளர் ரவி, கடையநல்லூர் ஒன்றிய தலைவர் சந்திரன், நகரத் தலைவர் சாஸ்தா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயக்குமாரி, தலைவி மகேஸ்வரி செங்கோட்டை நகர செயலாளர் பேமஸ் மஜீத் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜேக்கப் முத்துப்பாண்டி செங்கோட்டை நகரத் தலைவர் செண்பககுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்