குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பத்ர தீப வழிபாடு .!
தென்காசி

குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை பத்ர தீப வழிபாடு நடை பெறுகிறது
கோவில் அறங்காவலர் முனைவர் சக்தி முருகேசன் தகவல்
தென்காசி ஜூலை 23
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக் கோவிலில் ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு ஆண்டு தோறும் பத்ர தீப வழிபாடு நடை பெறுவது வழக்கம். இந்த நிகழ்வு ஒரு முக்கியமான வழிபாட்டு நிகழ்வாகும். இதில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டு தங்கள் மூதாதையர்களை நினைத்து பிரார்த்தனை செய்வார்கள். திருக் குற்றாலநாதர் திருக் கோவிலில் ஆடி அமாவாசை நாளில் லட்சதீபம் ஏற்றும் பத்திர தீப விழா மிகவும் விமர்சையாக நடைபெறும்.
இந்த விளக்கு பூஜையின் முக்கியத்துவம் மூதாதையர்களுக்கு வழிபாடு என்பது ஆடி அமாவாசை அன்று மூதாதையர்களை வழிபடும் நாளாகும் இந்த நாளில் செய்யப்படும் விளக்கு பூஜைகள் மூலம் ஆசீர்வாதங்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும்.
குற்றாலம் கோயில் வளாகம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலமாக காட்சியளிக்கும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை தினமான நாளை இந்த நிகழ்ச்சி குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயிலில் மிக சிறப்பாக நடைபெறும் என்றும் விளக்கு பூஜை பக்தர்களுக்கு மன அமைதியையும் ஆன்மீக எழுச்சியும் அளிக்கும் என்றும் நாளை நடைபெறும் இந்த பத்ர தீப வழிபாடு நிகழ்ச்சியில் பக்தர்கள்,பொது மக்கள், சுற்றுலா பயணிகள் அனைவரும் கலந்து கொண்டு திருக் குற்றாலநாதரின் அருள் பெற்று செல்லுமாறு குற்றாலநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முனைவர் சக்தி முருகேசன் மற்றும் உறுப்பினர்கள் ஸ்ரீதர் வீரபாண்டியன் சுந்தர்ராஜன் ராமலட்சுமி பெருமாள் மற்றும் கோவில் அலுவலர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஆறுமுகம் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
செய்தியாளர்
AGM கணேசன்