செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நீர்பாதுகாப்பு  கருத்தரங்கம் .!

தென்காசி

செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நீர்பாதுகாப்பு  கருத்தரங்கம் .!

செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நீர்பாதுகாப்பு  கருத்தரங்கம்

தென்காசி,ஜூலை  8

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில்  நீடித்த நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
 
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு நீர்வளத்துறை சிற்றாறு வடிநிலம் கோட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பருவநிலை மாற்ற இயக்கம் இணைந்து நீடித்த நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த  கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் பொறியாளர் எல்.கணபதி வரவேற்றுப் பேசினார். சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சி.மணிகண்டராஜன் தலைமை உரையாற்றினார்.  கருத்தரங்கில் அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் டாக்டர் மா.புதிய பாஸ்கர் வாழ்த்துரை வழங்கினார். நீர்வளத்துறை முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் ஆர்.ராமச்சந்திரன் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். நீர்வளத்துறைப் பொறியாளர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த  கருத்தரங்கில் அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் கல்யாணி புதியபாஸ்கர், கல்லூரி பொது மேலாளர் டி.மணிகண்டன் பங்கேற்றனர். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரியின் சார்பில் கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர் சேவியர் இருதயராஜ்,  நீர்வளத்துறை சார்பில் உதவி பொறியாளர் பி.கோபால கிருஷ்ணன் நன்றி கூறினார். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  நீர்வளத்துறை சார்பில் உதவிப் பொறியாளர் எஸ். மகேஸ்வரன்  செய்திருந்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்