தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .!
தென்காசி

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி ஜூலை 8
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது இக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் உதவிஉபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,10,000/- வீதம் மொத்தம் ரூ.8,80,000/- மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.4000/- வீதம் ரூ.16,000/- மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளையும், 11 பயனாளிகளுக்கு சீர் மரபினர் நலவாரிய அடையாள அட்டைகளையும், தாட்கோ மூலம் திருவேங்கடம் வட்டம் அழகாபுரி பகுதியில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக் கூடத்தின் சாவியினை ஆதிரை மகளிர் சுய உதவிக் குழுவினரிடமும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள் 6 நபர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
ஏ.கே.கமல்கிஷோர் வழங்கினார்.
செய்தியாளர்
AGM கணேசன்