தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் சிறப்பு வார்டு குழு கூட்டம்.!
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் சிறப்பு வார்டு குழு கூட்டம்
மாவட்ட ஆட்சியர்
கமல் கிஷோர் தகவல்
தென்காசி அக் 25
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் 27.10.2025, முதல் 29.10.2025 முடிய மூன்று தினங்களில் சிறப்பு வார்டு குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
அரசாணை (நிலை) எண்.324, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை, நாள்.17.10.2025 ல் மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட அப்பகுதி வார்டு உறுப்பினர் தலைமையில், மாநகராட்சி/ நகராட்சி/பேரூராட்சி அலுவலர் ஒருவரை கூட்டுனராக கொண்டு அவ்வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் வகையில், வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்களை 27.10.2025. 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தினங்களில் ஏதேனும் ஒரு நாளில் அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்து, முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் மூன்று (3) கோரிக்கைகள் மட்டும் செயல் படுத்தும் விதமாக கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் 27.10.2025. 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய மூன்று தினங்களில் சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர் தலைமையில் அந்தந்த உள்ளாட்சி துறையின் அலுவலக கூட்டுநர் மூலம் குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு வார்டு குழு கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்படி சிறப்பு வார்டு குழு கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட் வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மூன்று கோரிக்கைகளை தேர்வு செய்து முதல்வரின் முகவரியில் பதிவு செய்திட பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
AGM கணேசன்
