நிரம்பிய ஏரி: கிராம மக்கள் சார்பில் பூ தூவி வழிபாடு .!
கிருஷ்ணகிரி
சூளகிரி அருகே முழுமையாக நிரம்பிய ஏரி: கிராம மக்கள் சார்பில் பூ தூவி வழிபாடு மேற்க்கொண்ட அதிமுக கழக துணை பொதுச்செயலாளர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, சூளகிரி அடுத்த பண்ணப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள ஏரி, கடந்த சில தினங்களாக பெய்த மழையால் முழுமையாக நிரம்பி உள்ளது..
5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரியிலிருந்து உபரிநீர் பெருக்கெடுத்துள்ள நிலையில் கிராம மக்கள் சார்பில் பூஜை செய்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடி மராமத்து பணிகளால் ஏரி ஆழமாக்கப்பட்டு முழுக்கொள்ளளவை எட்டி இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்ட பாசனத்திற்கு தண்ணீர் விவசாயிகளுக்கு பலனளித்து உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை பொதுச்செயலாளர், வேப்பனஹள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமி அவர்களை அழைத்து ஏரிக்கு பூஜை செய்தனர் பின்னர் கே.பி.முனுசாமி அவர்கள் ஏரியில் பூ தூவி வழிபாடு நடத்தி கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் சூளகிரி ஒன்றிய கழக செயலாளர் பாபு வெங்கடாஜலம், மாவட்ட பொருளாளர் மல்லையா, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் ரங்கநாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணப்பா, சாரதி, சின்னப்பையா, அவை தலைவர் முனி சந்திரபா ஊர் கவுண்டர் திமிரா அப்பா , முன்னாள் கவுன்சிலர எல்லப்பா, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
