இந்திரா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழாஞ்சலி செலுத்தியதோடு இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் பிறந்த நாளினை காங்கிரஸ் கட்சியினர் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள
காட்டி நாயனப்பள்ளி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் அன்னை இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான
எல் சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் உமர், ஆகியோர் கலந்துக் கொண்டு அன்னை இந்திரா காந்தியின் திரு உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து புகழாஞ்சலி செலுத்தி உறுதி மொழியும் எடுத்து கொண்டதோடு கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவின் போது தமிழக மக்களின் வாக்கு உரிமையை பறிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் ஜாக்கப், நகர தலைவர் யுவராஜ், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னீர் செல்வம், கண்ணன், யாதவராஜ், அன்பரசன், மாணிக்கம்
உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள்
கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
