சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி கேட்டு பலகலைகழக வாயிலில் உள்ளிருப்பு போராட்டம். .!

சென்னை

சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி கேட்டு பலகலைகழக வாயிலில் உள்ளிருப்பு போராட்டம். .!

தரமணி சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி கேட்டு பலகலைகழக வாயிலில் உள்ளிருப்பு போராட்டம். 

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழக மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆண்கள் விடுதி கோரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் ஆண்களுக்கு ஏன் விடுதி இல்லை, விடுதி வழங்காமல் இருப்பதற்கு என்ன காரணம், நீதி வேண்டும், நியாயம் தானா நியாயம் தானா என மாணவர்கள் கோஷமிட்டு கல்லூரி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கேட்கின்றனர். 

அரசு பள்ளியில் படித்து 7.5% கீழ் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நிரந்தர விடுதி இல்லாததால் வெளியில் தங்கும் நிலை ஏற்படுவதாகவும் அதற்கு அதிக பொருட்செலவு ஆவதாகவும், அதனால் கல்லூரியில் சேர்வதையே சிலர் தவிர்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். 

நிரந்தர விடுதி கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்படும் என எழுத்துப் பூர்வ வாக்குறுதி அளிக்க வேண்டும், 

புதிய விடுதி கட்டிமுடிக்கும் வரை அடையாறில் உள்ள பூம்மொழில் விடுதியில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும், அங்குள்ள நிர்வாக குறைகளை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். 

பேட்டி:- சரண் ( சட்டப்பல்கலைகழக மாணவர்)

செய்தியாளர்

        S S K