குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் சார்பில் இலவச திருமணம் .!
தென்காசி

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் சார்பில் இலவச திருமணம்
மாவட்ட ஆட்சியர்,
எம் பி, எம் எல் ஏ பங்கேற்பு
தென்காசி ஜூலை 2
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ராஜா அண்ணா மலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசை பொருள்களை வழங்கியதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக் குற்றாலநாத சுவாமி திருக் கோயிலில் நடைபெற்ற திருமணத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் ஆகியோர் கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டத்தில் இந்து அறநிலைய துறையின் சார்பில் ஐந்து இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் கலந்து கொண்ட இணைகளுக்கு நான்கு கிராம் தங்கம் மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருள்கள், பாத்திரங்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குற்றாலநாத சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர்/உதவி ஆணையர் ஆறுமுகம், குற்றாலநாத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சக்தி முருகேசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள்ஸ்ரீதர் வீரபாண்டியன், சுந்தர்ராஜன், ராமலட்சுமி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மணமகன், மணமகள் குடும்பத்தினர்கள், அரசுஅலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்