தென்காசியில் மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்.!
தென்காசி

தென்காசியில் மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
தென்காசி ஜூலை 28
தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட திமுக அலுவலகம் அருகில் உள்ள கோல்டன் மஹாலில் வைத்து நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.
மாநில இளைஞரணி துணை செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான ஜி பி ராஜா முன்னிலை வகித்தார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ண ராஜா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ்தொகுப்புரை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் சாதிர் அப்பாஸ் ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் ரமேஷ் வீராணம் சேக் அறங்காவலர் குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் பேரூர் செயலாளர்கள் சங்கர் என்ற குட்டி சுடலை முத்தையா பண்டாரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்