தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.!
தென்காசி

செப். 24 ல் தமிழகம் முழுவதும்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.
தென்காசி, செப் - 10
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் செப்.24 ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்க ங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகித்துள்ள தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் நல்.செல்லப் பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் வே.புதியவன், மாநில பொருளாளர் கோ. ரெங்கராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு ஊரகவளர்ச்சிதுறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடந்த 23.08.2025 அன்று ஒரு லட்சம் ஊரக வளர்ச்சித்துறை பணியா ளர்கள் கலந்துகொண்ட கோரிக்கை மாநாடு திருச்சியில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 16 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில் தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 ஊதியம் ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், வட்டார மாவ ட்ட சுகாதார ஒருங்கிணைப் பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு வட்டார மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், சுகாதார ஊக்குநர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கி மாதம் ரூ 10,000 வழங்கிட வேண்டும்,
மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடிநீர் ஆபரேட்டர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட கணினி உதவியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களை பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும், ஊராட்சி கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இயக்க நடவடிக்கைகளாக நடத்தப்பட உள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 24.09.2025 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பும் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரகவளர்ச்சிதுறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொள்வோர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரகவளர்ச்சிதுறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அ.ஜான் போஸ்கோ பிரகாஷ், திண்டுக்கல் மாவட்டத்தில் அ.சுப்பிரமணி, மதுரை மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நல்.செல்லப் பாண்டியன், திருச்சியில் ம.ரவி, புதுக்கோட்டையில் கே. பழனிச்சாமி, நாமக்கல் மாவட்டத்தில் ஜி.ராதா, தென்காசியில் மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை வே.புதியவன், தூத்துக்குடியில் வேல்முருகன் சேலத்தில் கே. மகேஸ்வரன் திருப்பத்தூரில் செங்கதிர் செல்வன் நாகையில் எஸ் கௌசல்யா, கரூரில் மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் கோ.ரெங்கராஜ், ராமநாதபுரத்தில் பி முத்துமாரி, விழுப்புரத்தில்சு.இராமலிங்கம், கள்ளக்குறிச்சியில் கவிச்செல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் நல். செல்லப் பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் வே.புதியவன், மாநில பொருளாளர் கோ.ரெங்கராஜ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர்
AGM கணேசன்