பாமக நிறுவனர் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரம் தமிழக அரசு சைபர் புலனாய்வு உயர் அதிகாரிகளை கொண்ட குழு ஆய்வு செய்ய வேண்டும். !
அரசியல்

பாமக நிறுவனர் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரம் தமிழக அரசு சைபர் புலனாய்வு உயர் அதிகாரிகளை கொண்ட ஒரு குழுவை நியமித்து இதன் பின்னணியில் இருக்கக்கூடியவர்கள் யார் என்பதை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு இது குறித்து உண்மை நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி.
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு செய்த துரோகத்தை தமிழக முதலமைச்சர் 10.5 விழுக்காடு கொடுப்பதில் அவர் செய்த கபட நாடகத்தை வன்னியர் மக்களுக்கு அவர் செய்த நம்பிக்கை துரோகம் என்றார்.
சென்னை தாம்பரத்தில் பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசுகையில் தாம்பரம் பகுதியில் சென்னை புறநகர் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி நடைபெற இருக்கக்கூடிய வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான 20ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள அந்த போராட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வரும் 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
உரிமை மீட்பு இயக்கம் நடைபயணம் என்ற அந்த பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் கட்சியினுடைய நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்வதற்காக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய அறிவுறுத்தலின் பெயரில் இந்த பகுதிக்கு நாங்கள் வந்திருக்கிறோம். நிர்வாகிகளோடு நாங்க கலந்து பேசி கொண்டிருக்கிறோம்.
இந்த தருணத்தில் நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனர் மரியாதைக்குரிய மருத்துவர் ஐயா அவர்கள் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு இயந்திரம் பொருத்தப்பட்டு அது ஒட்டுக் கேட்கப்படுகிறது என்ற ஒரு அதிர்ச்சியான செய்தியை அவர் நேற்று வெளியிட்டார்.
இந்த தகவல் அறிந்து பாட்டாளி மக்கள் கட்சியினரும் மருத்துவர் ஐயா மீது அன்பு கொண்டவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள் தமிழ்நாட்டினுடைய ஒரு மூத்த தலைவர் அவருடைய இல்லத்தில் இதுபோன்று ஒட்டுக் கேட்கப்படுகிறது என்ற செய்தி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
இது உண்மையாக இருக்கும் என்றால் அதற்கு பின்னணியில் இருந்தவர்கள் யார்?
அந்த சாதனத்தை அங்கே பொருத்தியவர்கள் யார்?
எதற்காக அது அங்கே பொருத்தப்பட்டது என்பதெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும். மக்கள் முன்பாகவும் பாட்டாளிகள் முன்பாகவும் அது தெரியப்படுத்த வேண்டும்.
எனவே தமிழக அரசு சைபர் புலனாய்வு உயர் அதிகாரிகளை கொண்ட ஒரு குழுவை நியமித்து இதன் பின்னணியில் இருக்கக்கூடியவர்கள் யார் என்பதை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு இது குறித்து உண்மை நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்று இந்த உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.
காரணம் ஒரு தைலாபுரம் என்பது மருத்துவர் ஐயா அவர்கள் வாழக்கூடிய இடம் அவருடைய வீட்டில் இதுபோன்ற ஒரு ஒட்டுக்கேட்பு சாதனம் அங்கே கொண்டு போய் பொருத்தப்படுகிறது என்று சொன்னால் மிகப்பெரிய ஒரு பாதுகாப்பு குறைபாடு அங்கே இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு ஆபத்தானது.
எனவே இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளை கொண்ட இதற்காக இருக்கக்கூடிய பிரத்தியேகமான சைபர் பிரிவு அதிகாரிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு இதனுடைய உண்மை நிலையை கண்டறிந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது தமிழக அரசினுடைய கடமையாக நாங்கள் பார்க்கிறோம்.
இந்த பிரச்சினை என்பது அவர் தெரிவித்திருக்கிறார். ஏதோ ஒரு சாதனம் கைப்பற்றப்பட்டதாக அவர் சொல்லியிருக்கிறார். அந்த சாதனம் என்ன? அது எங்கிருந்து வந்தது? யார் கொண்டு போய் வைத்தார்கள்? எத்தனை நாள் அது அங்கே இருந்தது? அங்கிருந்த சாதனத்தின் மூலமாக யார் அதை ஒட்டு கேட்டார்கள்? இதை ஒட்டு கேட்பதற்கான காரணம் என்ன என்பதெல்லாம் மக்கள்மன்றத்தில் வெளிவர வேண்டிய மிக முக்கியமான செய்திகள்.
எனவே தமிழக அரசு இது குறித்து உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டு அதற்கான உண்மையை தமிழக மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
இது தைலாபுரத்தில் நடைபெற்றிருக்கிறது தேவைப்பட்டால் நாங்கள் இங்க இருக்கக்கூடிய மாவட்ட டிஜிபி அலுவலகத்தில் இதற்கான புகார் என்பதை தேவைப்பட்டால் நாங்கள் அது விழுப்புரத்தில் அங்கிருக்கக்கூடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைபர் பிரிவில் தான் அந்த புகார் கொடுக்கப்பட வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் ஆகி இருக்கிறது இதுவரையில் அவர் இன்னும் வந்ததை இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகுதான் அவர் பத்திரிக்கையாளருடன் நேற்றைய தினம் அவர் சொல்லியிருக்கிறார். எனவே இது குறித்து இப்ப உங்கள் மூலமாக இதை சொல்லுகிறோம். காவல்துறையும் தமிழக அரசும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். புகார் வேண்டும் என்று சொன்னால் நிச்சயமாக அதற்கான ஒரு புகாரை தரலாம்.
பொதுவா இதுல யார் மேல உங்களுக்கு சந்தேகம்?
அதுதான் அது காவல்துறை கண்டுபிடிக்கணும் விசாரிக்கணும் அதற்கான தேவை என்ன என்பதையும் நாம் கண்டறியா இன்னைக்கு மருத்துவர் ஐயா அவருடைய இல்லம் என்பது பல்வேறு தருணங்களில் நாங்கள் எல்லாம் சென்று வந்த இடம். ஒரு புனிதமாக பார்க்கப்பட்ட இடம் அங்கே உள்ளே நுழைவது என்றால் ஏதோ ஒரு பேராலயத்தில் ஒரு தேவாலயத்திற்குள் உள்ளே நுழைகின்ற பொழுது இருக்கக்கூடிய மன உணர்வோடு பயபக்தியோடு அந்த அளவில் தான் நாங்க எல்லாம் அந்த இடத்திற்கு அவரை சென்று இதுவரையில் இங்க இருக்கக்கூடிய எல்லோருமே நாங்க எல்லாம் அப்படி சந்தித்து வந்திருக்கிறோம் ஆனால் இப்பொழுது எல்லோரும் செல்கிறார்கள் போகிறார்கள் வருகிறார்கள் செல்கிறார்கள் பேர் ஊர் தெரியாதவர்கள் எல்லாம் சென்று நின்று கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது எனவே அவருடைய அது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை எனவே அதன் மூலமாக இது எப்படி அங்கே வந்தது இதுவும் மிகப்பெரிய ஒரு அவருடைய இல்லம் அது அந்த இல்லத்தினுடைய இருக்கையில் இது பொருத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் பிண்ணனியில் அவருடைய யார் செய்தார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதற்கு யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறை.
பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கியவர் மருத்துவர் ஐயா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கக்கூடிய பல்வேறு நிர்வாகிகள் தொண்டர்கள் எங்களை போன்றவர்கள் இந்த நிலைமைக்கு உருவாகி இருக்கிறது பின்னணியாக இருக்கக்கூடியவர் ஐயா அவர்கள் ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை இப்பொழுது இருக்கக்கூடிய சூழல் என்பது இது அப்படியே இருந்துவிடாது நிச்சயமாக இதில் நிச்சயமாக மாற்றங்கள் வரும். எல்லோருக்கும் ஒரு சுமூகமான சூழல் ஏற்பட வேண்டும் என்ற விருப்பம்தான் எங்களிடத்திலே இருந்து கொண்டிருக்கிறது. எனவே இப்பொழுது இருக்கக்கூடிய நிலைமையை வைத்து எந்த கருத்தையும் இப்பொழுது நாங்கள் சொல்வது என்பது அது இருதரப்பும் எல்லோருமே நாங்கள் ஒன்றாக பழகியவர்கள். சிலர் அங்கே இருக்கின்றார்கள். பிறகு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களோடு இருந்துவிடுகிறார்கள். எனவே எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும் எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து இந்த இயக்கத்தை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள் எங்களுடைய ஆசை. இது குறித்து எங்கள் பல்வேறு விமர்சனங்கள் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மீதும் அவருடைய அரசியல் நிலைபாடு குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் பத்திரிக்கைகளில் வந்தாலும் கூட ஒரு தந்தை ஸ்தானத்தில் இருக்கக்கூடியவர் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பொதுவெளியில் உங்களிடத்தில் இதுவரையில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அந்த சூழலில் அவருடைய அந்த நிலைப்பாட்டிற்கு எந்தவிதமான உந்தகமும் வந்துவிடக்கூடாது எனவே கருத்து என்பது எதிர்கருத்தாக எதையும் இந்த நேரத்தில் சொல்ல முடியாது. நாங்கள் எல்லாம் அன்புமணி ராமதாஸ் அவருடைய எழுச்சி நடைபயணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதேபோன்று வரும் 20ஆம் தேதி விழுப்புரத்தில் நடக்கக்கூடிய அந்த வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு செய்த துரோகத்தை தமிழக முதலமைச்சர் 10.5 விழுக்காடு கொடுப்பதில் அவர் செய்த கபட நாடகத்தை வன்னியர் மக்களுக்கு அவர் செய்த நம்பிக்கை துரோகத்தை மருத்துவர் ஐயா அவர்களுக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை எப்படி எல்லாம் அவர் ஏமாற்றினார் இந்த மக்களை எப்படி எல்லாம் வஞ்சித்தார் என்பது குறித்து ஒரு மிகப்பெரிய ஒரு போராட்டத்தை நாங்கள் நடத்த இருக்கிறோம் விழுப்புரத்தில் தான் நமது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய தந்தை அவர்களை அழைத்து மருத்துவர் ஐயா அவர்கள் அங்கே அவரை ஒரு சிம்மாசனத்தில் அமர வைத்து அவருக்கு ஒரு மஞ்சள் சால்வையை போர்த்தி தமிழகத்தினுடைய முதலமைச்சராக அழகு பார்த்தது பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ஐயா அவர்கள்.
20 ஆம் தேதி விழுப்புரத்தில் நடத்தக்கூடிய அந்த மாபெரும் போராட்டத்தின் மூலமாக இப்பொழுது தமிழக முதலமைச்சராக இருக்கக்கூடிய மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்களை முதலமைச்சரிலிருந்து இறக்குவதற்கான நாள் குறிக்கக்கூடிய நாளாக அமையும் 20ஆம் தேதி அதே விழுப்புரத்தில் அதுதான் எங்களுடைய நோக்கம் வன்னியர்களுக்கு செய்திருக்கக்கூடிய துரோகம் என்பது சாதாரணமானது அல்ல பிற்படுத்தப்பட்ட ஆணையத்தை அமைப்பதற்காக அவர் முயற்சி மேற்கொண்டார் உச்சநீதிமன்றம் சொன்னது 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இருந்து வன்னியர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் உரிய தரவுகளை திரட்டி அதன் மூலமாக அதை கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்து நீதியரசர் பாரதிதாசனை நியமனம் செய்து வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான தரவுகளை தர வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டது அதனுடைய அரசாணை என்பது இப்பொழுதும் இருந்து கொண்டு ஆனால் அதற்குப் பிறகு தமிழக அரசு மாநில அரசிற்கு உரிமை இல்லை இதை எங்களால் இப்பொழுது தர முடியாது மத்திய அரசுதான் இந்த விவரங்களை எடுக்க வேண்டும் என்று சொல்வது என்பது உள்ளபடியே ஒரு பச்சை துரோகத்தை தமிழக முதலமைச்சரும் தமிழக அரசும் வன்னியர் சமுதாய மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் அந்த கூட்டத்திலே கலந்து கொண்டு முதலமைச்சர் முதலமைச்சர் தனிச்செயலாளர் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தினுடைய செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளோடு கொண்டு பல்வேறு கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். இதற்கான பல்வேறு தரவுகளை தமிழக அரசு திரட்டியது. வேலைவாய்ப்பில் 20 விழுக்காட்டில் வன்னியர் எந்த அளவிற்கு பயனடைந்திருக்கிறார்கள்? கல்வியில் மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் 1989ல் இருந்து எந்த அளவிற்கு வன்னியர்கள் 20 விழுக்காட்டில் பயனடைந்திருக்கிறார்கள் என்பதற்கான தரவுகளை எல்லாம் திரட்டினார்கள். குரூப் 1 மற்றும் குரூப் இரண்டு தமிழ்நாடு தேர்வாணையத்தினுடைய பதவிகளில் 20 விழுக்காட்டில் வெறும் 3%, 4% மட்டுமே வன்னியர்கள் உள்ளார்கள் என்ற விபரத்தை அறிந்து இதற்காகத்தான் நாங்கள் கேட்கிறோம் என்பதை அப்பொழுது அவர்களுக்கு தெளிவாக தெரிவித்தோம்.
அப்பொழுது கூட உங்களுக்கு நினைவிருக்கும். சிவசங்கர் சொன்னார் அது நான் பிரிவு நான்கு பிரிவு டி சி போன்ற நியமனங்களில் இதைவிட கூடுதலாக கிடைக்கும். இது ஆபத்தாக இருக்கும் என்று சொன்னார். அப்படி என்றால் அன்றைக்கே அவர்களுக்கு தெரியும். குரூப் ஒன் மற்றும் இரண்டு வன்னியர்களுக்கு மிக குறைவான அளவிற்குதான் அந்த 20 விழுக்காட்டில் அவர்களுக்கான இடம் என்பது கிடைத்தது என்பது தெரியும். ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் அப்படியே ஏமாற்றிவிட்டு இதை கொடுப்பதற்கு ஏமாற்றுகின்றார்கள் தேர்தல் நெருங்க இருக்கிறது. பல்வேறு வாக்குறுதிகளை அவர் முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு அதை செய்ய தவறுகிறார். இது இந்த திராவிட முன்னேற்றக்கழக அரசு என்பது வன்னியர்களுக்கு விரோதமான வன்னியர் சமுதாயத்தை வஞ்சிக்கக்கூடிய ஒரு அரசாகத்தான் இது இருந்தது. பல்வேறு நிலைகளில் இந்த சமுதாய மக்களுடைய இன்னைக்கு தமிழ்நாடு தேர்வாணைய நியமனங்கள் செய்யப்படுவதில் வன்னியர்களுக்கு உரிய இடமில்லை அரசு செயலாளர் பதவியில் வன்னியர்களுக்கு இடமில்லை காவல்துறை உயர் அதிகாரிகள் பதவியில் வன்னியர்களுக்கு இடமில்லை பல்வேறு இயக்குனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் வன்னியர்களுக்கு உரிய இடம் இல்லை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் வன்னியர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை. இங்க பக்கத்தில இருக்கக்கூடிய கிண்டி பக்கத்தில இருக்கக்கூடிய பட்ரோட்டில் வன்னியர் சங்கம் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மாணவர்கள் சென்னையிலே தங்கி அவர்கள் அங்கே பயின்று கல்வி பயின்று வேலைக்கு செல்லக்கூடிய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு மாணவர் விடுதி. அந்த மாணவர் விடுதியை கைப்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு எடுத்த முயற்சியை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து அதை மீண்டும் வன்னியர் சங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்னையினுடைய புறநகர் பகுதியில் ஆயிரம் காணியை ஆள வந்தான் இன்றைக்கு வைத்திருந்த அந்த நிலங்கள் தமிழ்நாடு இந்த நமது எச்ஆர்என்சி பிரிவிலே இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது ஆயிரம் காணி ஆனால் கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டம் அங்கே இருக்கிறது. அதற்கு ஆளவந்தாருடைய பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம். ஆனால் அதை செய்ய தவறுகிறார். இப்படித்தான் இந்த வன்னியர் சமுதாய மக்களுக்கு உரிய நீதியை நியாயத்தை இந்த அரசு வழங்க மறுக்கிறது இதையெல்லாம் வரக்கூடிய காலகட்டங்களில் குறிப்பாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேற்கொள்ளக்கூடிய அந்த எழுச்சி நடைபயணத்தில் திமுகவினுடைய இந்த கபட நாடகத்தை நாங்கள் தோலுறித்து காட்டோம்.
நீங்கதான் கண்டுபிடிக்கணும். இதற்கு மேல் கட்சியில் இருக்கக்கூடிய தற்பொழுது இருக்கக்கூடிய நிலை குறித்து எந்த கருத்தையும் நான் தெரிவிப்பது என்பது நியாயமாக இருக்காது. இந்த நிலைமை என்பது மாறும் மாற வேண்டும் மாறும் என்ற நம்பிக்கையோடுதான் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதனால் நாங்கள் எல்லாம் சோர்ந்து விட்டதாக நீங்கள் கொள்ள முடியாது. ஏனென்றால் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தொடர்ச்சியாக எங்களுக்கு பல்வேறு வேலைகளை கொடுத்திருக்கிறார். கட்சியினுடைய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். நேத்துதான் அதற்கான கூட்டம் என்பது பனையூரில் நடைபெற்றது. 20 விழுக்காட்டிற்கான போராட்டம் நடத்துவது, நடைபயணம் மேற்கொள்வது, கட்சியினுடைய புதிய நிர்வாகிகள் மேற்கொள்வது, நியமனம் செய்வது போன்ற பணிகளை நாங்கள் தீவிரமாக செய்து வருகிறோம். எனவே முன்பை விட பாட்டாளி மக்கள் கட்சி இப்பொழுது தீவிரமாக களப்பணியாற்றுகிறார்.
அதெல்லாம் உங்களுக்கே தெரியும் என்ன நடக்கிறது
பொறுப்பாளர் போட்டுருக்காங்க இவர் தனியா பொறுப்பாளர் போட்டுருக்காங்க அவங்க தனியா அடிமட்ட தொண்டர்கள் எல்லாம் எப்படி அவங்களோட மனநிலை எப்படி இருக்கும்
இது சம்பந்தமா பல கேள்விகள் மருத்துவர் ஐயா நீங்க கேட்டிருக்கீங்க
காலப்போக்குல எல்லாம் மாறிடும்
என்னனங்க அப்படி சொல்லிட்டு இருக்கீங்க தொடர்ச்சியா பல கூட்டங்களில் சொல்றாரு குறிப்பா சொல்லப்போனா மருத்துவர் ஐயா இருக்கட்டும் அல்லது கட்சியினுடைய தற்போது நிலை குறித்து சமூக வலைதளங்களில் எந்த கருத்தையும் பதிவு செய்யக்கூடாது இது ஐயாவும் சொல்றாரு அன்புமணி ராமதாஸ் அவர்களும் சொல்றாரு எனவே இதை தாண்டி சிலர் விஷமிகள் செய்வாங்க அததான் சொல்றேன் அது மாதிரி இதை தாண்டி சில விஷமிகள் செய்கிறார்கள் என்று சொன்னால் அதுவும் தவறு அதை செய்யக்கூடாது நம்மை பொறுத்தவரையில் இந்த இப்பொழுது இருக்கக்கூடிய சூழல் நீங்க கேட்கக்கூடிய கேள்விகள் எல்லாம் இன்னும் ஒரு மூணு மாசத்தில தேவையற்ற கேள்விகளாக கூட மாறலாம்
அதாவது அந்த நடைபயணம் தொடங்கக்கூடிய நாள் என்பது அவருடைய பிறந்த தினத்தில் தான் அதை துவங்குகிறோம் எங்களுடைய விருப்பம் எங்களுடைய ஆசை மருத்துவர் ஐயா அவர்கள் அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் சொல்லக்கூடிய ஒரு செய்தி என்னவென்று சொன்னால் மக்களை சென்று செல் கிராமங்களுக்கு செல் மக்களோடு வாழு இதைத்தான் அவர் சொன்னார் அவருடைய அந்த விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் தான் இந்த எழுச்சி நடைபயணம் உரிமை மீட்பு நடைபயணத்தை அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேற்கொள்கிறார் எனவே அந்த நடைபயணத்தினுடைய துவக்க நாளில் மருத்துவர் ஐயா அவர்கள் வந்து அந்த நடைபயணத்தை துவக்கி வைத்தால் பெரும் அது ஒரு மகிழ்ச்சியை ஒட்டுமொத்த பாட்டாளிகளுக்கும் அது ஏற்படுத்தும் அது கட்சியை பலப்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.
அன்புமணி ராமதாஸ் தொடர்பு கொண்டு அழைப்பு விடுதற்கு வாய்ப்பு இருக்குமா என கேட்டதற்கு
திருப்பூரில் 25ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டமாக கிராமப்புறமாக பல்வேறு தரப்பு மக்களையும் சென்று அன்புமணி ராமதாஸ் 100 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அது ஒரு டிசம்பர் மாதம் வரை அந்த சுற்றுப்பயணம் இருக்கும்
செய்தியாளர்
S S K