சிங்காரப்பேட்டை மற்றும் மிட்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்.!
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், 51 ஊத்தங்கரை (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள், சிங்காரப்பேட்டை மாவட்ட எல்லை சோதனைச்சாவடி, சிங்காரப்பேட்டை மற்றும் மிட்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
