தைவான் நாட்டை சார்ந்த சுப்ரித் என்ற தர்பூசணி விதை விதைத்ததில் விளைச்சல் அதிகரிப்பு. !

கிருஷ்ணகிரி

தைவான் நாட்டை சார்ந்த சுப்ரித் என்ற தர்பூசணி விதை விதைத்ததில் விளைச்சல் அதிகரிப்பு. !

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி விளைச்சல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி, தரமான விதைகளை வாங்கி சாகுபடி செய்யுமாறு விவசாயி வேண்டுகோள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி பகுதியில் உள்ள விவசாயிகள் ஒவ்வொரு சீசன் காலத்திற்கு தேவையான பயிர் சாகுபடி மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, காய்கறிகள், பழவகைகள் மற்றும் பூக்கள் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோடை காலத்தில் தாகம் தணிக்கும் பழவகைகளில் ஒன்றான தர்பூசணி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். பிப்ரவரி மாதம் முதலே தர்பூசணி பழங்கள் சந்தைகளில் கிடைக்கும் வகையில் திட்டமிட்டு விவசாயி அத்தி குண்டா பகுதியை சேர்ந்த விவசாயி சபியுல்லா என்பவர் தைவான் நாட்டை சார்ந்த சுப்ரீத் என்ற ரகத்தினை வாங்கி முதல்முறையாக இயற்கை முறையில் சாகுபடி செய்து உள்ளார்.

ரசாயன உரங்களை தவிர்த்து மாட்டு சாணம், ஆட்டு எரு, வேப்பம் புண்ணாக்கு, மற்றும் கடலை புண்ணாக்கு, புங்கன் புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி தர்பூசணி சாகுபடி செய்த இவர் நினைத்தப்படி தர்பூசணி நல்ல விளைச்சலை கண்டுள்ளது.

இதில் குறிப்பாக ஒவ்வெரு தர்பூசணி பழங்களும் குறைந்தது 10 கிலோ முதல் 15 கிலோ வரை விளைச்சல் கண்டுள்ளதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். மிகப்பெரிய அளவில் விளைச்சல் கண்டுள்ளதை அறிந்த வியாபாரிகள் நேரடியாக விளை நிலத்திற்கு வந்து கொள்முதல் செய்ய தனி ஆர்வம் காட்டியுள்ளனர்.

மேலும் இது குறித்து விவசாயி சபியுல்லா தன்னை போல மற்ற விவசாயிகளும் தைவான் நாட்டை சார்ந்த சுப்ரித் என்ற விதையை வாங்கி சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு தமிழ்நாடு விதை விற்பனை மேலாளர் சத்தியவான் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் செயல்விளக்க பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இது குறித்து பேசிய அத்திகுண்டா பகுதியில் தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயி சபியுல்லா கூறும்போது.....
 
தர்பூசணி பழம் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யக்கூடிய குறுகிய கால பயிராகும் இருந்தாலும், கோடைக்காலத்தை குறி வைத்தே விவசாயிகள் சாகுபடியை மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக, நவம்பர்-டிசம்பர், பிப்ரவரி-மார்ச் மற்றும் ஜூன்-ஜூலை விதைப்பு காலங்களாகும். நவம்பர் மாதம் விதைக்கப்பட்டத்தில், தர்பூசணி அறுவடைக்கு தயாராக உள்ளது. மேலும், தற்போது குளிர், பனியின் தாக்கம் குறைந்து நகர்புறங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால், தர்பூசணி பழங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஒரு ஏக்கர் தர்பூசணி சாகுபடி செய்ய, ரூ 60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவாகிறது,

மேலும் சுப்ரீத் மற்றும் நாம்தாரி உள்ளிட்ட ரக விதைகள் விதைக்கப்பட்டதில், நல்ல விளைச்சல் வந்துள்ளது. சுப்ரீத் 
ரக பழம் ஒன்று 10 முதல் 15 கிலோ வரை எடை இருக்கும். அடர்சிவப்பு நிறத்தில் நல்ல சுவையாக இருப்பதால்
தர்பூசணி பழங்கள் அகமதாபாத், மும்பை, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர்.  இதனால் எல்லா செலவுகளும் போக ஏக்கருக்கு சுமார் 3 லட்சம் வரை குறுகிய காலத்தில் லாபம் கிடைப்பதாக தெரிவித்தார்.

செய்தியாளர் 

மாருதி மனோ