மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள்- மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான வணிக சந்திப்பு நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி

மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள்- மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான வணிக சந்திப்பு நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மூக்கண்டபள்ளி, ஹோட்டல் ஹில்ஸ் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கஎ, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய ஆறு - மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள்- மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான வணிக சந்திப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.  இன்று துவக்கி வைத்தார்.

227 மகளிர் சுய உதவிக்குழுவினர், 75 சிறு குறு நிறுவனங்களுக்கிடையே ரூ. 7 கோடி மதிப்பில் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்த ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

உடன், ஒசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ