மாநில அளவிலான கலைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசிப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாணவன் சாருகேஷ்வரன்.!

கிருஷ்ணகிரி

மாநில அளவிலான கலைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசிப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாணவன் சாருகேஷ்வரன்.!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசிப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாணவன் சாருகேஷ்வரன்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக கலைத் திருவிழா மாவட்ட அளவில் நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு மாநில அளவிலான போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நடைபெற்றது. இந்த கலைத் திருவிழாவில் நாதஸ்வரம், தவில், வயலின், பரதநாட்டியம், புல்லாங்குழல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கலை சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. 

இந்த போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட அளவில் புல்லாங்குழல் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற கிருஷ்ணகிரியைச்  சார்ந்த நாதஸ்வர வித்துவான்கள் திருநாவுக்கரசு - புவனேஸ்வரி தம்பதியினரின் மகன் சாருகேஷ்வரன் மாவட்ட அளவில் நடைபெற்ற புல்லாங்குழல் போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று கந்தர்வகோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான புல்லாங்குழல் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றான். மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி அவர்களும், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களும் கலந்து கொண்டு புல்லாங்குழல் வாசிப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்ற கிருஷ்ணகிரி மாணவன் சாருகேஷ்வரன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கி வாழ்த்தினர்.

செய்தியாளர் 

மாருதி மனோ