செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா."
கிருஷ்ணகிரி
பாரம்பரிய உணவு திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம், செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறுதானியங்களை பயன்படுத்தி தயார் செய்த உணவு வகைகள் மற்றும் பழங்கள் காய்கறிகள் பயன்படுத்தி நெருப்பில்லா உணவு வகைகள் தயார் செய்து வெகு சிறப்பாக காட்சிக்கு வைத்திருந்தனர்.
மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து தாங்கள் காட்சிப்படுத்திய உணவுகள் தயார் செய்த முறை பற்றியும், சத்தான உணவு சாப்பிட்டால் நீண்ட நாள் நோயின்றி ஆரோக்கியமாக உயிர் வாழமுடியும் என மிகத்தெளிவாக எடுத்துரைத்தனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வெகு சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.


நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் உணவு தயார் செய்த பெற்றோர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆக்ஸ்போர்டு பள்ளியின் நிறுவனர் மகேந்திரன் வாழ்த்துகளும் நன்றியும் தெறிவித்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
