தந்தை பெரியார் சதுக்கத்தில் மே17 இயக்கம் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் உள்வட்ட சாலை தந்தை பெரியார் சதுக்கத்தில் மே17 இயக்கம் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் வனவேந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் ராமசந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம், புரட்சிகர தொழிலாளர் முன்னணி மாணிக்கவாசகம், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், தமிழ்நாட்டு மாணவர் இயக்கம் செல்வராஜ், புதிய ஜனநாயகம் முன்னணி ரஞ்சித், மே17 இயக்க கொண்டால்சாமி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.

செய்தியாளர்
மாருதி மனோ
