குள்ளம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் .!
கிருஷ்ணகிரி
குள்ளம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு, நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளம்பட்டி கிராமத்தில் குடியரசு தினத்தினை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களின் அறிக்கையின் படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே .கோபிநாத் அவர்களின் அறிவுறுத்தலின்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் எம் சி ரகு அவர்கள் கலந்து கொண்டார்.
அப்போது நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை மத்திய அரசு சீர்குலைக்கும் நோக்கில் செயல்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் உள்ள மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி சட்டம் ஏற்றி உள்ளது.
இந்த சட்டத்தினை கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றக் கூடாது. காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட
100 நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தி அவர்களின் பெயரை வைத்துள்ள பெயரை எடுக்கக் கூடாது என் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்பேது குள்ளம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
