கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் திருக்கோவில் ரூ 50 லட்சம் ரூபாய் நோட்டுகள் கொண்டு திருக்கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு அம்னுக்கு சிறப்பு அலங்காரம்.!
கிருஷ்ணகிரி
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் திருக்கோவில் ரூ 50 லட்சம் ரூபாய் நோட்டுகள் கொண்டு திருக்கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு அம்னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, ரூபாய் நோட்களால் குபேர அலங்காரத்துடன் காட்சியளித்த பெரிய மாரியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி சென்னை சாலையில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில் இன்று 2026 - ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பெரிய மாரியம்மன் திருக்கோவில் ரூ.50 லட்சம் ரூபாய் நோட்டுகள் கொண்டு ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு குபேர அலங்காரம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் உள்ள துலாபாரம், தூண்கள் என அனைத்து பகுதிகளும் புதிய ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகளும் நடைபெற்றது.
பின்னர் ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க கவசத்துடன், குபேர அலங்கரத்துடன் காட்சியளித்த பெரிய மாரியம்மனை கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய திருக்கோவில் அறங்காவலர்
முத்துகுமார் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ 50 லட்சம் பணத்தினைக்கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, அது போல திருக்கோவில் முழுவதும் 500, 200,100, 50, 20, 10 ஆகிய ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்காரம் செய்யபட்டது.

ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்காரம் செய்யப்படுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய வீடுகளிலும் செல்வம் செழித்திடவும், நாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திடவேண்டும் என்பதற்காக இந்த ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
-
