ஊத்தங்கரை கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்க வளாகத்தில் குடும்ப அட்டைத்தார்களுக்கு ரூபாய்.3000/- பொங்கல் பரிசுகள் .!

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்க வளாகத்தில் குடும்ப அட்டைத்தார்களுக்கு ரூபாய்.3000/- பொங்கல் பரிசுகள் .!

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி  கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஊத்தங்கரை கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்க வளாகத்தில் குடும்ப அட்டைத்தார்களுக்கு ரூபாய்.3000/- பொங்கல் பரிசுகள் தமிழ்நாடு உணவு மற்றும் உணவு  பொருள் வழங்கல் துறை மாண்புமிகு அமைச்சர் அண்ணன்  திரு.அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப, கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,  கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோர் பொது மக்களுக்கு வழங்கினர்.

உடன் மாநில,  மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ