பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளி தரைமட்டமாக்கிய இராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே மாதிநாயனப்பள்ளி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளி தரைமட்டமாக்கிய இராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதிநாயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூலிதொழிலாளியான வெங்கடேசன், இவர் தனது மகள் ராஜம்மாள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஊர் மிட்டாதாரிடம் இருந்து தானமாக பெற்ற இரண்டு சென்ட் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வரும் விக்ரம் என்பவர் இந்த நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி வீட்டை காலி செய்ய வேண்டி கடந்த சில வருடங்களாக வெங்கடேஷ் குடும்பத்தினரை மிரட்டி அச்சுறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து விடுமுறைக்கு மாதிநாயனப்பள்ளி கிராமத்திற்கு வந்த விக்ரம் தொடர்ந்து வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியதோடு, பொக்லைன் இயந்திரம் மூலம் வெங்கடேஷன் குடியிருந்த வீட்டை இடித்து தள்ளி தரைமட்டம் ஆக்கியதில் வீட்டில் இருந்த தானியங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சேதமடைந்தது.
இதனைக்கண்ட கிராம மக்கள் காலம் காலமாக குடியிருந்து வந்த வீட்டை இடிக்கப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தினை கிராம மக்கள் சிறை பிடித்து மகாராஜாகடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைத்து வந்த காவல் ஆய்வாளர் சேகர் குடியிருந்து வந்த வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடிந்து தள்ளிய இந்திய ராணுவ வீரர் விக்ரம், பொக்லைன் இயந்திரத்தின் உரிமையாளர், மற்றும் ஒட்டுனர் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் குடியிருந்து வந்த வீட்டை இந்திய இராணுவ வீரர் ஒருவர் இடித்து தள்ளி தரை மட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்
மாருதி மனோ
