முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மருத்துவத் துறை பொதுப்பணி அலுவலர் சங்க மாநிலத் தலைவர், எஸ்மா/ டெஸ்மா எஸ்.கே.சரவணன் அளித்துள்ள வாழ்த்து செய்தி.

கிருஷ்ணகிரி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மருத்துவத் துறை பொதுப்பணி அலுவலர் சங்க மாநிலத் தலைவர், எஸ்மா/ டெஸ்மா எஸ்.கே.சரவணன் அளித்துள்ள வாழ்த்து செய்தி.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாநில தலைவர், தமிழ்நாடு மருத்துவத் துறை பொதுப்பணி அலுவலர் சங்க மாநிலத் தலைவர், எஸ்மா/ டெஸ்மா எஸ்.கே.சரவணன் அளித்துள்ள வாழ்த்து செய்தி.

01.04.2003 முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு அலுவலர் / ஆசிரியர்களுக்கு அமல்படுத்தியது.

அன்றைய முதலமைச்சர் J.ஜெயலலிதா, அவர்களிடம்  புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தமிழ்நாடு அரசில் அமுல்படுத்த வேண்டாம் என கோரி கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம், கருப்பு பட்டை அணிந்து போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், வாயில் முற்றுகை போராட்டம், பெருந்திரள் முறையீடு, மாவட்ட ஆட்சியர்களிடம் மனு, அமைச்சர்களிடம் மனு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு, எதிர்கட்சி தலைவரிடம் மனு அளித்தல் என என்னற்ற போராட்டங்கள் பல்வேறு பொது / ஆசிரியர் சங்கங்கள் நடத்தியும் ஏற்கப்படாமல் அன்றைய அரசு மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏற்கப்படாத நிலையில்  இத்திட்டத்தினை வலுக்கட்டாயமாக தமிழ அரசு அலுவலர் / ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்தினார்.

இதனை தொடர்ந்து 1.4.2003 முதல் 90 நாட்கள் கால அவகாசம் அளித்து 1.7.2003 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம் அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்படாத என அனைத்து அரசு / அலுவலர் ஆசிரியர் சங்கங்களும் ஒட்டுமொத்தமாக இணைந்து காலவரையற்ற போராட்டம் என பின்னர் அது 02.07.2003- அறிவித்து ஆயத்தப்பணிகள் செய்தது.

 ஆனால் அ.இ.அ.தி.மு - வினரால்  அம்மா என்று அழைக்கப்பட்டவர் கடுகளவும் இரக்கம் இல்லாமல் முன்கள போராட்டக்காரர்களான மாநில நிர்வாகிகளை 30.06.2003 அன்றே கைது செய்தது.  இரண்டாம் கட்ட மாவட்ட தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகளையும் 01.07.2003 நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து சிறையில் அடைத்ததோடு நில்லாமல் 2.7.2003 வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட / கலந்து கொள்ளாத என அனைத்து அரசு அலுவலர் / ஆசிரியர்களை அலுவலக வாயிலிலும், பேருந்து நிறுத்தத்திலும் ஓட, ஓட விரட்டி   கைது செய்ததோடு மட்டுமில்லாமல் ஒரே கையெத்தில் 4 லட்சம் அலுவலர் / ஆசிரியர்கள் டிஸ்மிஸ் என மிக மிக கடுமையாக நடந்து கொண்டார். 

30.6.2003 முதல் 2.7.2003 வரை கைது செய்தவர்களை எஸ்மா (Essential Maintanence Act.)  என்ற சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு பின்னர் 04.07.2003 முதல் டெஸ்மா ( Tamil Nadu Essential Maintanence Act.) என்ற சட்டத்திற்கு மாற்றி சிறையில் அடைத்து அங்கும் சித்ரவதை செய்தார். பின்னர் படிப்படியாக போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்து டிஸ்மிஸ் செய்தவர்களை படிப்படியாக வேலைக்கு சேர்த்துக் கொண்டார் 

4 லட்சம் டிஸ்மிஸ் என்பது, சிறை சென்றவர்களை அடையாளம் கண்டு இறுதியில் 1000 நபர்களை மட்டும் தொடர்ந்து டெஸ்மாவில் டிஸ்மிஸ்-ல் வைத்திருத்தார். அதில் ஒருவர் மருத்துவ விடுப்பு போட்டிருந்ததால் அவரையும் விடுவித்து இறுதியாக 999  நபர்களை மட்டும்  இந்த சட்டத்தில் வைத்திருந்தார்.  999 -ல் ஒருவர் தான் இந்த எஸ்மா | டெஸ்மா சரவணன். 30.06.2003 ல் இருந்து 06.01.2025 வரை (சுமார் 7860 நாட்கள்) 21 1/2 மாத கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 

அரசு , அலுவலர்கள் ஆசிரியர்கள் ஆழ்மனதில் ஆறாத வடுவதாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்த புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, இன்று 03.01.2026 திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உறுதியளிக்கப்பட்ட  ஓய்வூதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்கள்.

1. அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும், 
2. தகுதி பனிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்
3. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும் பனிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கு ஏற்ப ரூபாய் 25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை 
4. ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும்  அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் 
5. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் 
6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப் படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

என அறிவித்துள்ள திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர்  திருமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்கள் திரு. மிகு.ஏ.வா. வேலு (பொ.ப.து. ) அவர்களுக்கும், திருமிகு. தங்கம் . தென்னரசு (நிதி) அவர்களுக்கும் திருமிகு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளி கல்வி) அவர்களுக்கும் , கூடுதல் தலைமை செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர்களுக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றியினையும், நல்வாழ்த்துகளையும், எஸ்மா / டெஸ்மா . சிறை சென்ற செம்மல்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

எஸ்மா /டெஸ்மா
எஸ்.கே.சரவணன், எம்.ஏ.
மாநிலத் தலைவர்
த.நா. மருத்துவத்துறை பொதுப்பணி அலுவலர் சங்கம்.

செய்தியாளர் 

மாருதி மனோ