ஓசூரில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் 141 வது ஆண்டு துவக்க நாள் கேக் வெட்டி கொண்டாட்டம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் 141 வது ஆண்டு துவக்க நாள் கேக் வெட்டி கொண்டாட்டம். மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஓசூரில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 141 வது ஆண்டு துவக்க நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி துவங்கிய நாளை பிறந்தநாளாக கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விமர்சியாக கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து பேசிய மாவட்ட தலைவர் முரளிதரன், இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தாய் கட்சி காங்கிரஸ் கட்சி தான். 1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. திராவிட இயக்கங்களுக்கு எப்படி திராவிடர் கழகம் தாய் கட்சியோ அதை போன்றுதான் காங்கிரஸ் கட்சியும் அனைத்து கட்சி. ஏன் பெரியார் கூட இந்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்தான்.

இந்த நாளை நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது. இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் காங்கிரஸ் கட்சியின் தொண்டனாகவே பிறக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு மிகுந்த பெருமையாகவும் இருக்கிறது என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
