சேலத்தில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். !

கிருஷ்ணகிரி

சேலத்தில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். !

சேலத்தில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் பி.சி.ரவி வேண்டுகோள்.

கிருஷ்ணகிரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் பி.சி.ரவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

சேலத்தில் 29 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் ஜெயகுமார் திருமண மண்டபத்தில்  நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில செயல் தலைவர் திருமதி ஸ்ரீ காந்திமதி ராமதாஸ், மாநில இணைச் பொதுச்செயலாளர் அருள்  எம்.எல்.எ உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துக் கொள்ள இருப்பதால் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மருத்துவர் ஜயா அவர்களின் கரத்தினை வலுப்படுத்திட முன்வர வேண்டும் என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் 

மாருதி மனோ