கீழப்பாவூர் அருகே மழையினால் வீடு இடிந்த நபருக்கு  சிவ பத்மநாதன் நிதி உதவி வழங்கினார் .!

தென்காசி

கீழப்பாவூர் அருகே மழையினால் வீடு இடிந்த நபருக்கு  சிவ பத்மநாதன் நிதி உதவி வழங்கினார் .!

கீழப்பாவூர் அருகே மழையினால் வீடு இடிந்த நபருக்கு  சிவ பத்மநாதன் நிதி உதவி வழங்கினார் 

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் அருகே மழையால் வீடு இடிந்து விழுந்த நிலையில் வயதான தம்பதியரை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் அருகே மாடியனூர் ராஜபாளையம் தெருவில் ராஜாமணி ராஜாத்தி அம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் இவர்களது வீட்டின் பின்புறம் சுவர் இடிந்து சேதம் அடைந்தது. தனியாக வசித்து வரும் இந்த தம்பதியினர் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை அடுத்து தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாபன் சேதம் அடைந்த வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் காய்கறிகள் மற்றும் நிதி உதவியையும் வழங்கினார். மேலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி விரைவில் அரசு சார்பில் வழங்கக் கூடிய நிவாரணத் தொகையையும், வீடு இடிந்ததால் புதிய வீடு கட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

இதில் திமுக மாவட்ட விவசாய அணி துணை தலைவர் செல்வன் கிளை கழக செயலாளர் சரவணன் ஒன்றிய பிரதிநிதி நியூட்டன் முன்னாள் செயலாளர் காமராஜ் பொடியனூர் சிவன் பாண்டியன் ரூபன் பால் துரை மாயாண்டி சுதர்சிங் ஆசிரியர் அந்தோணி ராஜாங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்